பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலை பலூச் விடுதலை படையினர் சிறை பிடித்ததாகவும், அதில் பயணித்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்த நிலையில், 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 104 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.