திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உதயநிதியின் கட்-அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை முன்னிட்டு உதயநிதியின் பிரம்மாண்ட கட்-அவுட் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், உதயநிதியின் கட்-அவுட் சரிந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 3 பள்ளி குழந்தைகள் உட்பட 5 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.