பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி நகர பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே, பாஜக மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.