கன்னியாகுமரியில் மத போதகர் போல் நடித்த திருடனை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஷிபு எஸ் நாயர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் ஏழை பெண்களிடம் மத போதனை செய்வதுபோல் நாடகமாடி மிரட்டி பணம் நகைகளை திருடியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட ஷிபு எஸ் நாயரை கேரளா போலீசார் கைது செய்தனர். மத போதனை செய்து மக்களை நம்ப வைத்தது போன்று அவர் நடித்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.