காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய மாசி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9ம் நாள் உற்சவத்தில் ஆள்மேல் பல்லக்கில் காமாட்சியம்மன் பச்சைபட்டுடுத்தி லக்ஷ்மி தேவி சரஸ்வதி உடன் எழுந்தருளினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.