வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அதே பகுதியைச் சோ்ந்த முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோர் இந்த குற்றச்செயலைச் செய்ததாக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் ஜாமின் பெற்றனர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரும், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் இரண்டாவது நாளாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.