சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூலிழையில் வாகனத்தில் சென்றவர்கள் உயிர்தப்பிய வீடியோ இணையத்தில் வைரலானது.
சிச்சுவான் மாகாண நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மலையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுந்தன.
அதைக் கண்டுகொள்ளாத ஒரு சில வாகன ஓட்டிகள் வேகமாக அந்தப் பகுதியை கடந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் விபரீதத்தை உணர்ந்து அப்படியே நிறுத்தினர்.
இந்தச் சூழலில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த சமயத்தில் வந்த வாகனம் ஒன்று நூலிழையில் தப்பியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.