மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகனான ஹரிஹரசுதன் என்ற 17 வயது சிறுவன் 11 ஆம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் கடந்த ஓராண்டாக விட்டிலயே இருந்தார். தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடி, பப்ஜி, ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் கேம்கள் விளையாடிபடியே இருந்துள்ளார்.
தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டே இருந்த நிலையில் பெற்றோர் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில், சிறுவன் ஹரிகரசுதன் திடீரென வீட்டு மாடியில் இருந்து தனது செல்போனை உடைத்து நொறுக்கிவிட்டு மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதனையடுத்து படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.