கடலூர் மணிமுத்தாற்றில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக மணிமுத்தாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாசி மகத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள மணிமுத்தாற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. உடனே சாதுர்யமாக செயல்பட்ட வேப்பூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் தென் எழிலவன், வெள்ளம் அதிகரிப்பதற்கு முன்பே குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களை தூக்கிவந்து கரையில் சேர்த்தார்.
அவரது துரித நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.