தென்னூர் அருகே உக்கிரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு பேனர் வைப்பது தொடர்பாக ஒரு தரப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி – தென்னூர் பகுதியில் உக்கிரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பேனர்கள் வைப்பது வழக்கம். 4 நாட்களுக்கு முன்னதாக வைக்கப்படும் பேனர், நடப்பாண்டு ஒரு மாதத்திற்கு முன்பாக வைக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் உதவி ஆணையர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னூர் அரச மரம் பகுதியில் இந்து அமைப்பினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சென்ற திருச்சி மாநகர் சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதில், சிறிது தூரம் வரை பேனர் வைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது