பழனியில் மாசி திருவிழாவையொட்டி 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் மாரியம்மன் 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூச்சொரிதல் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.