மாசி மகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று பச்சை நிற பட்டு அணிந்து ஆபரணங்கள் பூட்டி, குங்குமப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப் பூ என பல்வேறு மலர்களால் மாலைகள் அணிந்து லட்சுமி, சரஸ்வதியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கே அம்மனுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பஞ்சகங்கா என்னும் கோயில் திருக்குளத்தில் மூழ்கி நீராட்டு செய்து, தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து புனித நீராடினர்.