கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஸ்ரீ நிவேதிதா சிசு நிவாஸ் குழந்தைகள் தத்தெடுப்பு வளர்ப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்துமதி என்பவர் நிவேதிதா என்னும் பெயரில் கடந்த 1998 முதல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் நரசிம்மா காலனி பகுதியில் குழந்தைகளுக்காக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீ நிவேதிதா சிசு நிவாஸ் மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பிரிவின் இணைச்செயலாளர் செந்தில்குமார், ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மையத்தை சார் ஆட்சியர் பிரியங்கா திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பிரிவின் இணைச்செயலாளர் செந்தில் குமார், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்வயம் சேவா சங்கங்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பாற்றப்படுவதாகவும், இது கடவுளுக்கான சேவை என்றும் அவர் கூறினார்.