இந்தியா, வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கம் முயன்ற 2,061 வங்கதேச மக்கள் கைது செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இந்தத் தகவலை குறிப்பிட்டிருந்தார். வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பொதுமக்கள் போர்க் கொடி தூக்கியதால், கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து சாரைசாரையாக மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதையொட்டி, எல்லையில் பிஎஸ்எப் படையினர் இரவு-பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.