பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் போதை தரும் ‘பாங்கு’ சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக்கூறி, ராப்ரி தேவி உட்பட ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராப்ரி தேவி, நிதிஷ் குமார் ‘பாங்கு’ சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருவதாகவும், அவர் பெண்களை அவமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.