பாகிஸ்தானில் பயணிகள் கடத்தப்பட்ட வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது.
17 சுரங்கப் பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் இருப்பு பாதையில், ரயில்கள் மிதமான வேகத்தில் செல்வது வழக்கம். இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள், சுரங்கப் பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.
ரயில் தண்டவாளம் வெடிப்பது, ரயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.