அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வருகை தர உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் அவரது பயண தேதி இன்னமும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான பிரச்னை நிலவும் சூழலில், அமெரிக்க துணை அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தோ-பசிபிக் பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டும் விரைவில் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.