மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியில் கரும்புகை பரவியது.
கௌதமாலாவில் உறங்கும் எரிமலைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அபாயம் நிலவுவதாக ஏற்கனவே வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
அந்த வகையில் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதால் கரும்புகை பரவியது. இதனால் தற்காப்புக்காக பொதுமக்கள் முகக் கவசமும் கண்களுக்கு கண்ணாடியும் அணிந்து கொள்ள வேண்டும் என கௌதமாலா அரசு அறிவுறுத்தியுள்ளது.