மியான்மர் – தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் பணியமர்த்தப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே நேற்று முன்தினம் 283 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.