கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் கணினி கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு உறுதியானதால், 16 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பல்கலைக் கழகத்துக்கு தேவையான 500 கணினிகள், தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவை 2016ஆம் ஆண்டு பல்வேறு கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்டன.
இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், முறைகேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி செய்து, 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.