ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவைகளுக்கும் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மாா்ச் 29-ம் தேதி அமா்வை நடத்திக்கொள்ள மக்களவை அலுவல் ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.