அந்தணர், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் இந்து ஒற்றுமை மாநாடு வரும் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
குடந்தையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமகம் விழாவில் மாநகராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை சரியான முறையில் ஏற்பாடு செய்யவில்லை என்றும், படிக்கட்டுகள் பாசிகள்ப்படிந்து வழுக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக சட்டமன்ற உறுப்பினரே அந்த பாசி படிந்த படிக்கட்டுகளில் வழுக்கி விழும் சூழ்நிலையும் ஏற்பட்டது என்றும், இனியாவது மகாமக குளத்தினை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விஐபி கலாச்சாரம் கோயில்களின் தலை விரித்து ஆடுவதாகவும், இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வருகின்ற 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அந்தணர் ஆலயம் ஆகமம் எந்த தலைப்பில் ஹிந்து ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.