சென்னை பெருங்களத்தூரில் கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி 59வது வார்டு சிவசக்தி நகரில், 9 லட்சம் ரூபாய் நிதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், தனிநபர் உரிமை கோரி பிரச்சனை செய்ததால் 10 சதவீத பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கால்வாய் பணியை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், தனிநபருக்கு ஆதரவாக மாநகராட்சி ஆணையர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.