பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அம்மன் தேரோட்டம் நடந்தது. அப்போது, ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வலம் வந்தது.