ஈகுவடாரில் வெளுத்து வாங்கிய கனமழையால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலும், சாலைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.