மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக திருவிழாவில் ஆயிரக்கணக்கான இருளர் சமூக மக்கள் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி மகா விழாவில், தமிழகத்தை சேர்ந்த இருளர் சமூக மக்கள் திரளாக கலந்துகொண்டு கன்னியம்மன் சாமிக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். திருமணம், காது குத்துவது, மொட்டை அடிப்பது போன்ற சுப நிகழ்வுகளும் கடற்கரையில் வைத்து நடைபெற்றன.