யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டதாகவும், இதற்கு முன்பு ஒருபோதும் கடத்தியதில்லை என்றும் நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக் கொண்டதாகவும், விமான நிலையத்தில் இருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல்களை வாங்கி கழிப்பறையில் தங்கக் கட்டிகளை தனது உடலில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.