அமெரிக்காவில் ஐடி நிறுவனத்திலிருந்து பச்சை நிறத்தில் வாயு வெளியேறியது பீதியை ஏற்படுத்தியது.
டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவன வளாகத்தில் பாதாள சாக்கடை அமைந்துள்ளது. இதில் அமைக்கப்பட்டு இருந்த துளை வழியாக திடீரென பச்சை நிறத்தில் வாயு வெளியேறியது.
இதனால் பீதி அடைந்த ஐடி நிறுவன நிர்வாகம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தது. இதன் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து வாயுவை கட்டுப்படுத்தினர்.