உக்ரைன் போர் நிறுத்தத்தைத் தடுப்பது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்தார்.
போர்நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷ்யா அதன் மீது எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த நிலையில், 30 நாள் போர்நிறுத்தத்தை ரஷ்யா கடைப்பிடிக்கத் தவறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.