ஒசூர் அருகே வீட்டில் முதியவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மனைவி தெரசாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஒன்னல்வாடி கிராமத்தில் லூர்துசாமி மற்றும் தெரசாளின் தங்கை எலிசபெத் வசித்து வந்தனர்.
இந்த சூழலில், இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும், தீ விபத்து போல் சித்தரித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.