சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 மணி நேரமாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனம், கார், வேன், அரசு பேருந்து என அடுத்தடுத்து வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மெட்ரோ ரயில் பணி மற்றும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.