திருப்பூரில் வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தலுக்கமுத்தூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான பழனிச்சாமி, பர்வதம் ஆகியோர் தங்களது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வந்தனர்.
இவர்களது உறவினரான ரமேஷ் வளர்த்து வந்த கோழிகள், அவ்வப்போது பழனிச்சாமியின் தோட்டத்துக்குள் புகுந்து தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ரமேஷ், பழனிச்சாமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், முதியவரின் வீட்டிற்குள் நுழைந்த ரமேஷ், தம்பதியர் இருவரையும் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.