தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அப்போது, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்குலுக்கு பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். நாளைய தினம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.