1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தததால் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்