தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு, முதியோர்களுக்கான உதவித் தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை விளங்குவதாக தெரிவித்துள்ள அவர்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என விமர்சித்துள்ளார்.