மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக தேவையற்ற பல பிரச்னைகளை தூண்டிய திமுக, நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்திருப்பது அவர்கள் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதையே வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு என எதுவுமே இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கைக்கான தலைப்பு, எல்லார்க்கும் எல்லாம் என்பதற்கு மாறாக, எவருக்கும் எதுவுமில்லை என்று வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.