தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாகவே அமைந்திருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.