தமிழக பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணம், வரி குறைப்பு குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என்றும், பின்னலாடை நிறுவனங்களுக்கு போதிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
“பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்த அறிவிப்புகள் இல்லை என்றும், “தொழில்துறையினருக்கு சாதகமான பட்ஜெட்டாக இல்லை என்றும் அவர் கூறினார்.