ஈரோட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில் தலைமையில் வீரப்பன் சத்திரம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர், சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம், ஈரோட்டில் உள்ள திமுக கவுன்சிலர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.