பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? என ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பிதாம்புரத்தில் ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார். அப்போது, நாட்டிற்கு பல மொழி கொள்கை அவசியம் என தெரிவித்தார். இது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அன்பை வளர்க்கும் என தெரிவித்தார்.
தமிழக தலைவர்கள் சிலர் ஹிந்தியை எதிர்ப்பதை சாடிய அவர், ஆனால் வருமான நோக்கத்திற்கான தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய அனுமதி அளிப்பதாகவும் கூறினார்.
பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை ஆனால், ஹிந்தி தேவையில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.