வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் - அண்ணாமலை விமர்சனம்!
Jul 3, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Mar 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 – 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? என்றும் அவர் வினவியுள்ளார்.

பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என கூறியுள்ளார்.

திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President Annamalaitn agriculture budgetagriculture budget 2025agri budget reactionagriculture budget
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த புதின்!

Next Post

திருவண்ணாமலை : மர்ம பொருள் வெடித்து வளர்ப்பு நாய் பலி!

Related News

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

அஜித்குமார் மரணம் – 8 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை!

ரயில் ஒன் – அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies