விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா இணைந்து, என்டூரன்ஸ் விண்கலத்தை அனுப்பி உள்ளன.
இந்திய நேரப்படி அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸின் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஸ்பேஸ் எக்ஸின் என்டூரன்ஸ் விண்கலம் மூலம் நாளை பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.