திருச்சி பீமநகர் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் வடமாநிலத்தவர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
அப்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து இனிப்புகள் வழங்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வடமாநிலத்தவர் அதிகம் வாழும் பீமநகர் பகுதியே ஹோலி கொண்டாட்டத்தால் களைகட்டியது.