காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது, வளர்ந்து வரும் தொழிநுட்பத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளும் வகையிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளதாக கூறினார்.
மாணவர்கள் அனைவரும் தங்களது தாய் மொழியிலியே கல்விக் கற்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகவும் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.