உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வராத நண்பரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டிய நிலையில், மொரதாபாத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடன் ஹோலி பண்டிகை கொண்டாட வருமாறு நண்பருக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். மேலும், தடுக்க வந்தவர்களையும் அவர் தாக்கினார்.