பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24, 25-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
காலி பணியிடங்களை நிரப்புதல், 5 நாள் வேலையை அமல்படுத்துதல், பணிக்கொடை உச்சவரம்பை 25 லட்சமாக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில், வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு ஸ்ட்ரைக் அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.