உத்தரப்பிரதேசத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நபர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அலிகரின் ரோராவில் உள்ள தெலிபாடாவைச் சேர்ந்த கட்டா என்பவர், தனது வீட்டின் வாசலில், நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இரு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கட்டா மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர்.
இதில் கட்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.