வேலூர் மாவட்டம், வேலப்பாடியில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் அம்மனுக்கு காலை முதலே சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதணை காட்டப்பட்டது.
30 அடி உயரமுள்ள அலங்கரிக்கபட்ட தேரில் ஆணைக் குளத்தம்மன் மற்றும் படவேட்டம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகளிலின் வழியாக தேரோட்டம் நடத்தப்பட்டது.