மனைவி ஆண் நண்பர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெண் தொடர்ந்த விவாகரத்து மேல்முறையீட்டு வழக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனைவி தனது ஆண் நண்பருடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், கணவரோ, மனைவியோ திருமணத்திற்கு பின் தங்களது எதிர்பாலின நண்பர்களுடன் பாலியல் ரீதியாக பேசவோ, சாட் செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தியது.
மேலும், விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றம், பெண்ணின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.