காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்.எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் 31-ம் ஆண்டு தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன், வானொலி சேவைகளை நல்ல முறையில் வழங்கிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மீனவர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து ஒலிபரப்பு செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார் .பின்னர் வானொலி நிலைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் அவர் நட்டு வைத்தார்.